உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

துாக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம், புதுநகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 50; சென்ட்ரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய ஆறுமுகம், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.கடந்த 23ம் தேதி இரவு ஆறுமுகம் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால், குடும்பத்தினர் அவரை கண்டித்தனர்.இதனால், மனமுடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் வீட்டின் வெளிப்புறமாக உள்ள அறையின் ஜன்னலில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை