மேலும் செய்திகள்
அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
28-Aug-2025
புதுச்சேரி : அதிகமாக மது குடித்த சிக்கன் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன், 33; சிக்கன் கடை தொழிலாளி. இவர் ரெயின்போ நகரை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால், குடிப்பழக்கத்திற்கு ஆளான சிவராமன், தினமும் கு டித்து விட்டு விட்டிற்கு வந்துள்ளார். இதனால் தம்பதிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த சிவராமன் வீட்டில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
28-Aug-2025