உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி 

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி 

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் மாங்காய் பறிக்கும்போது, மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைமுகில், 37; கூலிதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை பகுதி கிருத்துவ ஆலய வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி மாங்காய் பறித்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மரத்தில் இருந்து கலைமுகில் கீழே விழுந்து மயக்கமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர் பரிசோதித்து, கலை முகில் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மனைவி தமிழ்ச்செல்வி புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி