உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

அரியாங்குப்பம் : மின் ஒயரை எடுத்த போது மின்சாரம் தாக்கி ராஜஸ்தான் மாநில தொழிலாளி உயிரிழந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீர்சிங், 30. இவர், தவளக்குப்பத்தில் தங்கி, மேஸ்திரி ஒருவர் மூலம் கடலுார் சாலையில் உள்ள தனியார் மகாலில் கிரானைட் பதிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்த போது, கட்டிங் மிஷனில் இருந்த மின் ஒயரை கையால் எடுத்தார். அப்போது, மின்சாரம் தாக்கி, துாக்கி எறியப்பட்டார். காயமடைந்த, அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை