உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருபுவனை ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

 திருபுவனை ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

திருபுவனை: திருபுவனை அடுத்த திருவண்டார்கோவில் பெரிய பேட் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் ரமேஷ், 38; தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர், திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். தந்தை இறந்த நிலையில், தன் தாய் பாப்பாத்தி, தம்பி கோவலனுடன் வசித்து வந்தார். தினமும் காலை 9:00 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 10:00 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று திருபுவனை ஏரியில், தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இறந்தவர் ரமேஷ் என்பதும், நேற்று முன்தினம் திருபுவனை ஏரியில் சிறுவர்கள் குளிப்பதை பார்த்து தானும் இறங்கி குளித்தபோது, ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. போலீசார் உடலைமீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ