மயங்கி விழுந்து தொழிலாளி பலி
பாகூர்: பணியின் போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி 54; இவர் கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். சக ஊழியர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.