மேலும் செய்திகள்
வேன் மோதி வாலிபர் பலி
10-Nov-2026
காரைக்கால்: திருநள்ளாறில் கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி படுகாயமடைந்தார். திருநள்ளாறு, கீழத்தென்னங்குடியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 42; கூலி தொழிலாளி. இவர், கடந்த 11ம் தேதி பைக்கில் காரைக்கால் சென்று விட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பச்சூர் பகுதியில் இருந்து வந்த கார் பைக் மீது மோதியது. விஜயகுமார் அருகிலிருந்த நுாலாற்றில் விழுந்து காயமடைந்தார். உடன் அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், காரை ஓட்டி வந்த அம்பகரத்துாரை சேர்ந்த நிதீஷ்ராஜ், 20, என்பவர் மீது போக்குவரத்துப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Nov-2026