உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

பாகூர், : பாகூர், மாரி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 70; சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.நோணாங்குப்பம் மேம்பாலத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியதுடன், அவ்வழியாக வந்த தமிழக அரசு பஸ் மீதும் மோதியது.இந்த விபத்தில் செல்வராஜ் படுகாயமடைந்தார்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ