உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

புதுச்சேரி: அகரத்தில் சென்டரிங் தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அகரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 50; சென்டரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் அவ்வப்போது குடித்துவிட்டு வருவார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இரும்பு கேட்டின் உள்புறம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி