தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி: கட்டட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்,42; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் சூது விளையாடுவதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்தார். இதனால் மனமுடைந்த தாமோதரன் கடந்த 12ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.