உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காஞ்சி மாமுனிவர் கல்வி நிறுவனத்தில் ஊட்டச்சத்து குறித்த பயிலரங்கம்

 காஞ்சி மாமுனிவர் கல்வி நிறுவனத்தில் ஊட்டச்சத்து குறித்த பயிலரங்கம்

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், 'உணவுகளின் ஊட்டச்சத்து புதுமைகள் மற்றும் செயல்பாடுகள்' என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் நடந்தது. மனையியல் துறை சார்பில் நடந்த பயிலரங்கத்தில், துறை தலைவர் அலமேலு மங்கை வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் கோச்சடை தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜினி கருத்து மற்றும் நோக்கத்தை பற்றி விளக்கினார். இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். உயர்க்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சிவக்குமார், உயர்கல்வி நிறுவனங்கள், பாரம்பரிய உணவு அறிவை பாதுகாப்பதில், வகிக்கும் பங்கு குறித்து பேசினார். பேராசிரியர் ரஜினி சனோலியன், பாரம்பரிய உணவுகளில் ஊட்டச்சத்து புதுமைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், பூங்குன்றன் உயிர்சத்து வேளாண்மை மற்றும் மதிப்பு கூட்டல், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து பேசினர். பேராசிரியர் வண்டார்குழலி, இந்திய பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும், பாக்கியவதி பாரம்பரிய உணவுகளின் செய்முறை விளக்கம் அளித்தார். அனந்தராஜ் உணவு உட்கொள்ளும் முறையும், தமிழ் தென்றல், நுண்ணுயிர்களில் இருந்து உணவிற்கு புளிப்பூட்டல் அறிவியல் பற்றி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், பல்வேறு மாநில மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ