உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு ஓவியப்போட்டி

புதுச்சேரி : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 22ம் தேதி முதல் வரும் ஜூன் 5ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாட்டு வாழ்வாதார திட்ட அமைப்பு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.இந்தாண்டின் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற கருப்பொருளாக சுற்றுச்சூழல் தினம் கொண்டாப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற தலைப்பில் கீழ் ஒவியப்போட்டி லாஸ்பேட்டை, அப்துல்கலாம் அறிவியல் கோளரங்கத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போட்டியை புதுச்சேரி மாசுக்காட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் துவக்கி வைத்தார்.சுற்றுச்சூழல் பொறியாளர் காலமேகம், திட்ட அதிகாரிகள் நித்யா, ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை