மகளிர் பொறியியல் கல்லுாரியில் உலக குடியிருப்பு தின விழா
புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில், இந்திய பொறியியல் கழகம் சார்பில் உலக குடியிருப்பு தின விழா நேற்று நடந்தது. மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்த குடியிருப்பு தின விழாவில், இந்திய பொறியியல் கழக புதுச்சேரி மைய தலைவர் சீனு திருஞானம் பங்கேற்று, இந்திய பொறியியல் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து பேசினார். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் சுடலை சுப்பிரமணி, உலக குடியிருப்பு தினம் குறித்து சிறப்புரையாற்றினார். மகளிர் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராணி வாழ்த்தி பேசினார். கல்லுாரியின் கட்டடக்கலை துறை தலைவர் வெங்கடேஷ் பிரபு நன்றி கூறினார். லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் இந்திய பொறியியல் கழகம் புதுச்சேரி மையம் சார்பில் உலக குடியிருப்பு தின விழா நடந்தது.