மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் உலக கிட்னி தினம்
13-Mar-2025
புதுச்சேரி: அப்துல்கலாம் அறிவியல் மையம் சார்பில் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது.உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையம் சார்பில், உலக வானிலை தினம் நேற்று நடந்தது. கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், புதுச்சேரி கிளை பொறுப்பு வானிலையாளர் பாலமுருகன், வானிலை ஆராய்ச்சி துறையின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் கள பயண மாக லாஸ்பேட்டையில் உள்ள வானிலை மையம் சென்றனர். அங்கு வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள உபகரணங் கள், செயல்பாடுகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
13-Mar-2025