முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு
பாகூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றத்தில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில், புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில், முருக பக்தர்கள் ஒன்று திரண்டு கருங்கல் துாண் மீது தீபம் ஏற்றி வழிபட்டனர். பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர்.