உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில், 671 பேர் பங்கேற்றனர். புதுச்சேரி சுகாதாரத் துறையில் தியேட்டர் உதவியாளர் - 17, ஏ.என்.எம்., மகப்பேறு உதவியாளர் - 53, சுகாதார உதவியாளர் -24, மருந்தாளுர் - 43, இ.சி.ஜி., தொழில்நுட்பட வல்லுநர் -7 என, 144 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மருந்தாளுநர் பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு பெத்திசெமினார் பள்ளியிலும், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கான முதல் தாள் தேர்வு கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு நிறுவனத்திலும் காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடந்தது. தொடர்ந்து, சுகாதார உதவியாளர் பணிக்கான 2ம் தாள் தேர்வு 12:30 மணி முதல் 2:30 மணி வரை நடந்தது. மருந்தாளுநர் பணிக்கான 2ம் தாள் தேர்வு மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடந்தது. இரண்டு பணிகளுக்கான தேர்வுகளுக்கு 823 பேர் விண்ணப்பித்த நிலையில், 671 பேர் தேர்வு எழுதினர். 152 பேர் பங்கேற்கவில்லை. இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கான 2ம் தாள் தேர்வு இன்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி