ஜெராக்ஸ் கடை பூட்டு உடைப்பு
புதுச்சேரி .: புதுச்சேரியில் ஜெராக்ஸ் கடை பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 50; எல்லைப்பிள்ளை சாவடியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, வேறு பூட்டு போடப்பட்டிருந்தது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.