புதுச்சேரியில் 22ம் தேதி ஓடும் ரயிலில் யோகா
புதுச்சேரி : சர்வதேச யோக தினத்தையொட்டி, வரும் 22ம் தேதி ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி நடக்கிறது.நாளை சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி 'பீஸ் அன்டு க்யூர்' யோகா சென்டர் சார்பில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி நாளை மறுநாள் (22ம் தேதி) காலை 7:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் பயணிகள் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோக செயல் விளக்க நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம், புதுச்சேரி ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கிறார்.