மீன்பிடிக்க கடலுக்கு இன்று முதல் செல்லலாம்
புதுச்சேரி: மீனவர்கள், மீன் பிடிக்க இன்று முதல் கடலுக்கு செல்லலாம். மீன்வளத் துறை இயக்குநர் இஸ்மாயில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெஞ்சல் புயல் சின்னம் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதி மீனவர்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆதலால், இன்று 3ம் தேதி முதல் புதுச்சேரி பகுதி மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம்.இவ்வாற செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.