மேலும் செய்திகள்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் பொறியாளர் தின விழா
17-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2026 நிகழ்ச்சி நடந்தது. ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு மற்றும் ‘மை பாரத்’ சார்பில் இளம் தொழில் முனைவோர் வட்டமேடை நிகழ்ச்சி புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கலையரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர், மேலாண் இயக்குநர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். வேலை வாய்ப்புத் துறை டீன் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை டீன் வள்ளி நோக்கவுரையாற்றினர். சிறப்பு விருந்தினர் டச் சோலார் டெக்னாலஜிஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகானந்தம் வீரசாமி தொழில்முனைவு மற்றும் புத்தாக்க சிந்தனைகள் குறித்து பேசினார். ஐ இன்விசிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சிவகுமார் புதிய வணிக யோசனைகள் மற்றும் ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான எளிய வழிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பேச்சாளர் அரசி அருள் வணிகத் துறையில் பெண்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்தும், பெண் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார். பல்ஸ்பே வை வொர்க்கிங் மற்றும் வெல் டூ கல்வி நிறுவனர், இயக்குநர் சங்கரானந்த் பலராட்ஜூ நடுவராக செயல்பட்டு வழிநடத்தினார். நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைவர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை யங் இந்தியன்ஸ் புதுச்சேரி அத்தியாயத்தின் தலைவர் ஆர்த்தி, இணைத் தலைவர் தரணிதரன், யுவா தலைவர் ஈஸ்வர், மை பாரத் மாநில பரிந்துரையாளர் சுதர்சன், மணக்குள விநாயகர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறை டீன் வள்ளி, வேலை வாய்ப்புத் துறை டீன் ஜெயக்குமார், மன்சூர் இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர்.
17-Sep-2026