உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

புதுச்சேரி: இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபலட்சுமி, 22; பி.காம்., படித்து விட்டு, வில்லியனுார் தாலுகா அலுவலகத்தில் அப்ரண்டிசாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை