மேலும் செய்திகள்
இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு
10-Aug-2025
வில்லியனுார் : வில்லியனுார் - புதுச்சேரி மெயின்ரோட்டில் அனந்தம்மாள் சத்திரம் பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மூடி சென்றனர். நேற்று காலை கோவில் திறந்தபோது உண்டியல் திருடப்பட்டிருந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகானந்தன் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில் முகத்தில் மாஸ்க் அணிந்த இளைஞர், உண்டியலை திருடியது தெரியவந்தது. விசாரணையில், அவர், அனந்தம்மாள் சத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார், 23, என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
10-Aug-2025