மேலும் செய்திகள்
ரகளை செய்த வாலிபர் கைது
11-Aug-2025
புதுச்சேரி : பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒதியன்சாலை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் ரோந்து சென்றனர். அண்ணா சாலை ரத்னா தியேட்டர் அருகில் வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், புதுச்சேரி பிரிய தர்ஷினி நகரைச் சேர்ந்த அந்தோணி, 36; என்பது தெரியவந்தது. அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
11-Aug-2025