மேலும் செய்திகள்
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
11-Feb-2025
புதுச்சேரி : முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அலாவுதின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வில்லியனுார் - முருங்கபாக்கம் சாலை அருகே வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.அவர் முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த சுமன்ராஜ், 22, என்பதும், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த 104 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
11-Feb-2025