உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது 

கஞ்சா விற்ற வாலிபர் கைது 

புதுச்சேரி : ஆலங்குப்பம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். டி.நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆலங்குப்பம் சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடலுாரைச் சேர்ந்த சுப்ராயன் மகன் சரண், 24; என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, ரூ. 3 ஆயிரத்து 500 மதிப்பிலான 35 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின், சரணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை