கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி : குருமாம்பேட் தனியார் கம்பெனி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குருமாம்பேட் தனியார் கம்பெனி அருகே வாலிபர் ஒருவர், ஊழியர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், 50 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், அவர், குருமாம்பேட், ஓடைக்கரை வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் கோகுலகிருஷ்ணன், 19; என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா, பைக், மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.