உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். வில்லியனுார் அரசூர் சாலையில், பைக்கில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அவர் கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தமிழக பகுதியான பெரம்பை பகுதியைச் சேர்ந்த பேரரசு, 19, என்பதும், அவர், கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அவரை, கைது செய்தனர். அவரிடம் 20 பொட்டலங்களில் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை