கர்ப்பிணி பெண்ணை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது
காரைக்கால்; காரைக்காலில் கர்ப்பிணி பெண்ணை மிரட்டி நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால், கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் வீரமணிகண்டன்; பி.ஆர்.டி.சி., பணிமனை மெக்கானிக். இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுவேதா தற்போது மூன்று மாத கர்ப்பிணி. கடந்த 13ம் வீட்டில் சுவேதா மகனுடன் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். சுவேதா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது மர்ம நபர் இரும்பு ராடை காட்டி, சுவேதாவை மிரட்டி, அவர் கழுத்தில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மூன்று சவரன் நகையை பறித்து சென்றார்.இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுvபட்டனர். அவ்வழியாக சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கிய ஷாஜகான், 32, என்பதும், பட்டதாரியான இவர் சரியான வேலை கிடைக்காமல், பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்ததும். தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து நகை திருடியதும் தெரியவந்தது. அதே போல், சுவேதாவை மிரட்டி, நகையை பறித்தது தெரிய வந்தது. ஆரோக்கிய ஷாஜகானை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.