மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
04-Nov-2025
புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். டி. நகர், போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி சென்றனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில், வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், திலாசுபேட்டை, வீமன் நகரை சேர்ந்த நகுலன், 20, என, தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
04-Nov-2025