மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
25-Sep-2026
புதுச்சேரி: டி.நகர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். சாரம், வேலன் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீ சாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், சாரம் தென்றல் நகரை சேர்ந்த விக்னேஷ், 22, என்பதும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
25-Sep-2026