உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை விபத்தில் வாலிபர் பலி

 சாலை விபத்தில் வாலிபர் பலி

புதுச்சேரி: வில்லியனுார், கணுவாபேட்டையை சேர்ந்தவர் காமராஜ் மகன் ஜெயகுமார், 23; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது நண்பருக்கு சொந்தமான யமஹா பைக்கில் (பி.ஓய். 05.வி.பி) கடலுார் மெயின் ரோடு, முருங்கப்பாக்கம் வழியாக சென்றார். பின்னால் அதிவேகமாக வந்த பதிவெண் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயக்குமார் சென்டர் மீடியனில் துாக்கி வீசப்பட்டார். தலையில் படு காயமடைந்த அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை