மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்..
29-Apr-2025
அரியாங்குப்பம் : மூச்சு தினறல் ஏற்பட்டு தனியார் மருத்துவக் கல்லுாரியில் வேலை பார்த்த வாலிபர் இறந்தார். மணவெளி சிவலிங்கபுரத்தை சேர்ந்த சேகர் மகன் கிரிதரன், 29, இவர் உசுட்டேரி தனியார் மருத்துவனையில் சூப்பரைசராக பணி செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்த கிரிதரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வீட்டில் இருந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Apr-2025