உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

 இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை சபாநாயகர் தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றம் என்பது மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. சிறப்பு விருந்தினர் சபாநாயகர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பூஜா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கந்தவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்றம் நோடல் ஆபீசர் தாமோதரன், ஒருங்கிணைப்புச் செயலாளர் சுபஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி