உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக் கடையில் வாலிபருக்கு வெட்டு

சாராயக் கடையில் வாலிபருக்கு வெட்டு

வில்லியனூர்: புதுச்சேரி உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி 24, இவர் நேற்று நள்ளிரவு கணுவாப்பேட்டை சாராயக்கடைக்கு மதுக்குடிக்க சென்றார். அப்போது அங்கு உத்திரவாகினிபேட் பகுதியில் பிரியாணி கடைப்போடும் பாய் மற்றும் அவரது மகன் இருவரும் சாராயம் குடிக்க வந்தனர். அவர்களிடம் பாலாஜி எனக்கு சாராயம் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் பிரியாணி கடை பாய் மற்றும் அவரது மகன் இருவரும் பாலாஜி தலையில் கத்தியால் வெட்டினர். காயமடைந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டுபுதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை