எம்.ஐ.டி., கல்லுாரியில் ‘யூத் டாக் – 2026’ இறுதி போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், ஐ.சி.டி., அகாடமி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான ‘யூத் டாக் – 2026’ பிராந்திய இறுதிப் போட்டி நடந்தது. மாணவர்களின் பேச்சாற்றல், சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை மற்றும் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடந்த போட்டியில், புதுச்சேரியைச் சேர்ந்த ஆச்சார்யா கல்விக் குழுமம், மணக்குள விநாயகர் கல்விக் குழுமம் மற்றும் தக்ஷசீலா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 10 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டியில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, ஐ.சி.டி. அகாடமியின் திட்ட செயலாக்கம் மற்றும் தயாரிப்புகள் பிரிவின் தலைவர் சரவணன் பங்கேற்று வாழ்த்தி பேசினர். நடுவர்களாக, நொஷன் பிரஸ் மீடியா நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் வில்லியம் எபனேசர், ஹெவ்லெட் பேக்கார்டு நிறுவனத்தின் திட்ட மேலாண்மை மூத்த மேலாளர் மகேஷ் பாபு பாலன், விர்டுசா நிறுவனத்தின் திறன் மேலாண்மை இணை இயக்குநர் பரத் மோகன், வேகன் டெக்னா லஜி நிறுவனத்தின் மனிதவளத் துறை பொது மேலாளர் சரத் சந்திரா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதவள வணிகக் கூட்டாண்மைத் தலைவர் மணிகண்டன் மற்றும் கணினி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் ஸ்ரீராம் முத்துசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று மதிப்பீடு செய்தனர். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், எம்.ஐ.டி. கல்லுாரி முதல்வர் மலர்க்கண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எம்.ஐ.டி. கல்லுாரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைப் பேராசிரியர் வள்ளி, கலாச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவி திரிஷா கிருஷ்ணன், கோயம்புத்துாரில் நடக்கும் அடுத்தகட்ட இறுதிப் போட்டியில் பங்கேற் கத் தேர்வு செய்யப்பட்டார். ஏற்பாடுகளை, எம்.ஐ.டி. கல்லுாரியின் வேலைவாய்ப்புத் துறை டீன் ஜெயக்குமார், கல்லுாரிப் பேராசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஐ.சி.டி. அகாடமி குழுவினர் செய்திருந்தனர்.