பி.பி.எல்., கிரிக்கெட் நேற்றைய போட்டியில் ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணி வெற்றி
வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் நேற்று நடந்த போட்டியில் ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணி 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 2ஆவது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 27 ம் தேதி வரை பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று மதியம் நடந்த போட்டியில் 14வது லீக் போட்டியில், காரைக்கால் கிங்ஸ் அணியும்- ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும் மோதியது. முதலில் விளையாடிய ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 214 ரன்கள் எடுத்தது மூன்று விக்கேட்டுகளை இழந்தனர். இந்த அணியில் வேதாந்த் பரத்வாஜ், 57; பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்து விளையாடிய காரைக்கால் நைட்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சந்தீப் பாஸ்வான் 4 விக்கெட்டுகளையும், கண்ணன் விக்னேஷ் 3விக்கெட்டுகளையும் எடுத்தார். அணியில் 101 ரன்கள் எடுத்த வேதாந்த் பரத்வாஜ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.மாலை 6:00 மணியளவில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது. அடுத்து ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியும் விளையாடியது. இதில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.