மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
புதுச்சேரி: வில்லியனுார் அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில் வட்டம்- 5 சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடக்கக் கல்வித் துணை இயக்குநர் கவுரி மாணவர்களுக்கான போட்டிகளை துவக்கி வைத்தார். வட்டம்- 4 பள்ளித் துணை ஆய்வாளர் திருவரசன் முன்னிலை வகித்தார். கொடாத்துார் தனியார் பள்ளி நிர்வாகி ரமேஷ் கண்ணன் வாழ்த்தி பேசினார். வட்டம்- 5 துணை ஆய்வாளர் புவியரசன் வரவேற்றார். இதில், முன்மழலையர் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம், வினாடி வினா, பேச்சு, கட்டுரை, குழுநாடகம், குழுநடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை வட்டம்- 5ஐ சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். வில்லியனுார், அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.