மேலும் செய்திகள்
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
இந்தியாவுக்கு 4 தங்கம்: சீன பாரா பாட்மின்டனில்
21-Sep-2025
இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்
20-Sep-2025
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் பிரனாய், சமீர் வர்மா முன்னேறினர்.சிட்னியில் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய், இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மன் மோதினர். இதில் பிரனாய் 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா 21-14, 14-21, 21-19 என சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 20-22, 6-21 என ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஆஸ்திரேலியாவின் கெய் குய் பெர்னிஸ் தியோ மோதினர். இதில் ஆகர்ஷி 21-16, 21-13 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் அனுபமா, மாளவிகா பன்சோத் தோல்வியடைந்தனர்.கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 21-11, 21-11 என ஆஸ்திரேலியாவின் கெய் சென் தியோ, கெய் குய் பெர்னிஸ் தியோ ஜோடியை வீழ்த்தியது.பெண்கள் இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா, ஸ்வேதாபர்னா ஜோடி தோல்வியடைந்தது.
24-Sep-2025
22-Sep-2025
21-Sep-2025
20-Sep-2025