உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: அரையிறுதியில் அஷ்மிதா

பாட்மின்டன்: அரையிறுதியில் அஷ்மிதா

மக்காவ்: மக்காவ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா முன்னேறினார். சீனாவில், மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா தென் கொரியாவின் கிம் மின்-சனை எதிர்கொண்டார்.முதல் செட்டை அஷ்மிதா 21-16 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-18 என வசப்படுத்தினார். 37 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அஷ்மிதா 21-16, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அன்மோல் கார்ப், 4ம் நிலை வீராங்கனை, சீனாவின் குயான் ஜியை சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இப்போட்டியில் அன்மோல், 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை