உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...

லக்சயா சென் ஏமாற்றம் * உலக பாட்மின்டனில்...

பாரிஸ்: பிரான்சின் பாரிசில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர், உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள லக்சயா சென், உலகின் 'நம்பர்-1' வீரர், சீனாவின் யு கி ஷியை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை லக்சயா 17-21 என இழந்தார்.இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 13-17 என பின்தங்கிய லக்சயா, பின் 19-19 என மீண்டார். பின், தொடர்ந்து இரு 'கேமை' இழந்த லக்சயா, 19-21 என செட்டை நழுவவிட்டார். முடிவில் லக்சயா17-21, 19-21 என தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ