உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / துளசிமதி, நித்யஸ்ரீ தங்கம் * பாரா பாட்மின்டனில்

துளசிமதி, நித்யஸ்ரீ தங்கம் * பாரா பாட்மின்டனில்

டப்ளின்: பாரா பாட்மின்டனில் இந்தியாவின் துளசிமதி, நித்ய ஸ்ரீ உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினார்.பிரிட்டிஷ், ஐரிஸ் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் அயர்லாந்தின் டப்ளினில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்.யு.,5ல் இந்தியாவின் துளசிமதி, சக வீராங்கனை மணிஷாவை எதிர்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த துளசிமதி, 21-12, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.பெண்கள் இரட்டையர் பைனலில் துளசிமதி, மானஷி ஜோடி 14-21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஆக்டிலா, சாடியா ஜோடியிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தவிர கலப்பு இரட்டையர் பிரிவில் துளசிமதி, நிதேஷ் குமார் ஜோடிக்கு, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவு பைனலில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ (தமிழகம்), 21-12, 21-12 என இந்தோனேஷியாவின் ஆலிவியாவை வென்று, தங்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையரில் நித்ய ஸ்ரீ, கிருஷ்ணா ஜோடி 19-21, 12-21 என இந்தோனேஷிய ஜோடியிடம் தோற்க வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் (எஸ்.எல்.3) இந்தியாவின் பிரமோத் பகத் 23-21, 21-14 என சக வீரர் நிதேஷை வென்று தங்கம் வசப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !