மேலும் செய்திகள்
பாட்மின்டன்: மாளவிகா ஏமாற்றம்
20-Aug-2024
கபிலா-தனிஷா ஜோடி அபாரம்
05-Sep-2024
ஹோ சி மின்ஹ் சிட்டி: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி வெற்றி பெற்றது.வியட்நாமில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, வியட்நாமின் பாம் வான் ஹாய், தன் வான் அன்ஹ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 12-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றியது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 21-19 என தன்வசப்படுத்தியது. முடிவில் துருவ் கபிலா, தனிஷா ஜோடி 12-21, 21-17, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா வரியாத் ஜோடி 21-13, 21-18 என சகநாட்டை சேர்ந்த டிங்கு சிங், பிரியா ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 18-21, 21-14, 16-21 என அஜர்பெய்ஜானின் பாத்திமா கெய்ஷாவிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுபாங்கர், சதிஷ் குமார் கருணாகரன், சமீர் வர்மா தோல்வியடைந்தனர்.
20-Aug-2024
05-Sep-2024