கவுகாத்தி பாட்மின்டன்: பைனலில் மிதுன்
கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், தான்வி சர்மா முன்னேறினர்.அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 27, துஷார் சுவீர் 19, மோதினர். அபாரமாக ஆடிய மிதுன் 22-20, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சன்ஸ்கார் சரஸ்வத் 19, இந்தோனேஷியாவின் டென்டி டிரையான்ஸ்யா மோதினர். இதில் சன்ஸ்கார் 21-19, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் மிதுன், சன்ஸ்கார் மோதுகின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா 16, ஜப்பானின் ஹினா அகேச்சி மோதினர். அபாரமாக ஆடிய தான்வி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா 21-12, 17-21, 14-21 என சீனதைபேயின் டங் சியோ-டாங்கிடம் தோல்வியடைந்தார்.