இந்தியாவுக்கு 28 பதக்கம்: இந்தோனேஷிய பாரா பாட்மின்டனில்
ஜகார்தா: இந்தோனேஷிய பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 28 பதக்கம் கைப்பற்றியது.இந்தோனேஷியாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் இந்தியாவின் நவீன் சிவகுமார், இரண்டு முறை பாராலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சின் லுாகாஸ் மசூர் மோதினர். இதில் நவீன் 17-21, 23-21, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷா 12-21, 22-20, 21-14 என்ற கணக்கில் சகவீராங்கனை துளசிமதியை வீழ்த்தி தங்கம் வென்றார். இது, இந்த ஆண்டு மணிஷா கைப்பற்றிய 4வது தங்கம்.பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி சிவன் 21-14, 21-13 என பெருவின் போவேடாவை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் சுகந்த் கடம், பிரமோத் பகத் ஜோடி 21-16, 21-12 என இந்தோனேஷியாவின் டிவியோகோ, செடியாவன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இத்தொடரில் இந்தியாவுக்கு 6 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என, மொத்தம் 28 பதக்கம் கிடைத்தது.