உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / லக்சயா சென் அபாரம் * இந்தோனேஷிய பாட்மின்டனில்

லக்சயா சென் அபாரம் * இந்தோனேஷிய பாட்மின்டனில்

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.இந்தோனேஷியாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், உலகத்தரவரிசையில் 14வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென், 12வது இடத்திலுள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடோ மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பிரியான்ஷு, தாய்லாந்தின் விதித்சர்னிடம் 10-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-19, 19-21, 19-21 என ஜப்பானின் மாயு மட்சுமோடோ, வகானா நாகஹரா ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 13-21, 21-19, 13-21 என தென் கொரியாவின் பேக் ஹா நா, லீ சோ ஹீ ஜோடியிடம் வீழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை