உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை

தங்கம் வெல்வார் லக்சயா: டென்மார்க் வீரர் நம்பிக்கை

புதுடில்லி: ''லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் லக்சயா சென் தங்கம் வெல்வார்,'' என டென்மார்க்கின் ஆக்சல்சென் தெரிவித்துள்ளார்.பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 22, நான்காவது இடம் பிடித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் ஆனார் லக்சயா சென். அரையிறுதியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வியடைந்த இவர், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் வீழ்ந்தார்.லக்சயாவின் செயல்பாடு குறித்து இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் (2020, 2024), இரண்டு முறை உலக சாம்பியன் (2017, 2022) பட்டம் வென்ற ஆக்சல்சென் கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக்கில் லக்சயா சென் சிறப்பாக விளையாடினார். திறமையான வீரரான இவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்வார். இதற்கான திறமை, தகுதி இவரிடம் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Swaminathan L
ஆக 17, 2024 12:15

அரையிறுதி முதல் ஆட்டத்தில் விக்டர் ஆக்ஸல்ஸன்னுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆடி ஏறக்குறைய அந்த ஆட்டத்தை ஜெயிக்க வேண்டியவர் தோற்றார். அடுத்த ஆட்டங்களில் விக்டரின் வேகம் மற்றும் மின்னல் வேக ஷாட்களை எதிர் கொள்ளத் திணறினார். லக்ஷயா சென்னின் ஆட்டம் மற்றும் அணுகுமுறை ஆக்ஸல்ஸன்னால் கணிக்க முடிந்ததாகவே இருந்தது. ஏழெட்டுப் பாயிண்டுகளாவது அவர் கையில் ஓங்கியடிக்கும் உயரத்தில் தொடர்ந்து கொடுத்து லக்ஷயா இழந்தார். இறுதி ஆட்டத்தில் அவர் என்ன செய்வதென்று விளங்காத மனோநிலையில் போட்டியில் தோற்றார். சாத்விக் ரெட்டி, ஷெட்டி ஜோடி தோற்றத்திற்கு முக்கிய காரணம் ஷெட்டியின் அதீதமான வேக அணுகுமுறை தான். அவருடைய ஆவேசமான அணுகுமுறையைக் கொண்டு பல பாயிண்டுகள் இழக்கும்படி ஆட வைத்தது எதிரணி. அதன்பின் ரெட்டியால் தன்னந்தனியாக அதிக பாயிண்டுகள் ஜெயிக்க முடியாமல் அவருடைய ஆட்டமும் சீர் கெட்டது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ