உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / மக்காவ் பாட்மின்டன்: காலிறுதியில் அஷ்மிதா

மக்காவ் பாட்மின்டன்: காலிறுதியில் அஷ்மிதா

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் அஷ்மிதா, அன்மோல் கார்ப் முன்னேறினர்.சீனாவில், மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, அமெரிக்காவின் இஷிகா மோதினர். இதில் அஷ்மிதா 22-20, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், மலேசியாவின் ஜின் வெய் கோ மோதினர். இதில் அன்மோல் 12-4 என முன்னிலையில் இருந்த போது மலேசிய வீராங்கனை காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து அன்மோல் கார்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார்.மற்ற 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி, ரக் ஷிதா ஸ்ரீ, இஷாராணி தோல்வியடைந்தனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தருண் 22-24, 15-21 என, சீனாவின் டியான் யாவ் டாங்கிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை