உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / மக்காவ் பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

மக்காவ் பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி, தஸ்னிம் மிர் வெற்றி பெற்றனர்.மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனில் டுபோவென்கோ மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-5 என சகவீரர் அலாப் மிஷ்ராவை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் சமீர் வர்மா, மிதுன் மஞ்சுநாத், சிராக் சென், சங்கர் முத்துசாமி தோல்வியடைந்தனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 15-21, 21-18, 22-20 என சகவீராங்கனை தேவிகா சிஹாக்கை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் தன்யா ஹேம்நாத், அனுபமா, இஷாராணி தோல்வியை தழுவினர்.கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 24-22, 10-21, 21-13 என மலேசியாவின் லோ பிங் குன், ஹோ லோ ஈ ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை