மேலும் செய்திகள்
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
இந்தியாவுக்கு 4 தங்கம்: சீன பாரா பாட்மின்டனில்
21-Sep-2025
இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்
20-Sep-2025
பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், அஷ்மிதா முன்னேறினர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் மோதினர். இதில் மிதுன் 21-9, 13-21, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி சுப்ரமணியன் 9-21, 11-21 என சீனதைபேயின் சுன்-யி லின்னிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, சீனதைபேயின் யு போ பை மோதினர். இதில் அஷ்மிதா 21-12, 15-21, 21-17 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 22-24, 7-21 என தாய்லாந்தின் புசானனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 24-22 என சகநாட்டை சேர்ந்த தனிஷா கிராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா ஜோடியை வென்றது.
24-Sep-2025
22-Sep-2025
21-Sep-2025
20-Sep-2025