மேலும் செய்திகள்
இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
22-Jan-2025
பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.தாய்லாந்தில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனி டுபோவென்கோ மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, இஸ்ரேல் வீரருக்கு எதிராக ஸ்ரீகாந்தின் 2வது வெற்றியானது. இதற்கு முன், கடந்த ஆண்டு மக்காவ் ஓபனில் டுபோவென்கோவை வென்றிருந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 15-21, 21-15, 21-19 என மலேசியாவின் ஜூன் வெய் சியாமை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, மிதுன் மஞ்சுநாத், தருண் தோல்வியடைந்தனர்.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரக்சிதா ஸ்ரீ 21-19, 21-16 என சீனாவின் லுவோ யூ வுவை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் தன்யா ஹேம்நாத், தாரா ஷா, ஸ்ரீயான்ஷி தோல்வியடைந்தனர்.கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 21-8, 21-16 என தாய்லாந்தின் பாக்ஜரூங், சூபோகா ஜோடியை வீழ்த்தியது.
22-Jan-2025